முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்..!

Published : Feb 27, 2026, 10:13 AM IST

O Panneerselvam joins DMK: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இன்று திமுகவில் இணைத்துக் கொண்டார்.

PREV
14
திமுகவில் பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான ஓ.பன்னீர்செல்வம் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சட்ட சிக்கல்கலைளச் சந்தித்த ஒவ்வொரு முறையும் முதல்வர் பதவிக்கு முதல் சாய்சாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது வேறு வழியின்றி திமுகவில் இணைந்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

24
MLAவான உடன் முதல்வர்

2001ம் ஆண்டு மே மாதம் முதல் முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வம் அதே ஆண்டு முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு ஜெயலலிதா சிறை சென்ற போது பன்னீர் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இறுதியாக ஜெயலலிதா உயிரிழந்த பின்னரும் சசிகலா தரப்பின் முதல் தேர்வாக பன்னீர்செல்வம் இருந்தார்.

34
ராஜினாமா செய்த பன்னீர்

ஆனால் சசிகலா தரப்புடன் உருவான மனக்கசப்பு காரணமாக பன்னீர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பழனிசாமி முதல்வராக்கப்பட்டு பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். சசிகலா சிறை சென்ற பின்னர் பாஜக தலையிட்டு பன்னீர், பழனிசாமி தரப்பை சமாதானப்படுத்தி பழனிசாமியை முதல்வராகவும், பன்னீர்செல்வத்தை துணைமுதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரென முக்கிய பொறுப்புகளைப் பெற்றுக் கொடுத்தது.

44
திமுகவில் இணைந்த பன்னீர்செல்வம்

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வின் போது பழனிசாமி, பன்னீர் தரப்பு இடையேயான மோதல் காரணமாக அக்கட்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டார். அதன் பின்னர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு பலமுறை, பல வழிகளில் கோரிக்கை விடுத்தும் பழனிசாமி செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில் வேறு வழியின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பன்னீர்செல்வம் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories