தொடர் தோல்விகளால் துவண்டு போயிலுள்ள அதிமுக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் இதில் பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். போகும் இடமெல்லாம் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் இபிஎஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.