சுய உதவி குழுவிற்கு ஜாக்பாட்.! ரொம்ப ரொம்ப கம்மி வட்டியில் 25 லட்சம் ரூபாய்- அள்ளிக்கொடுக்கும் அரசு

Published : Jul 18, 2025, 07:26 AM IST

தமிழக அரசு பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000,  மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000, இந்த நிலையில்  சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் கடன் என பல உதவிகள் வழங்கப்படுகின்றன.

PREV
14
தமிழக அரசின் மகளிர்களுக்கான திட்டங்கள்

தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. இது பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கவும், சிறிய சிறிய தேவைகளுக்கும் பயன்படும் வகையில் வழங்கப்படுகிறது. 

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. பெண்களின் கல்வி தொடர்ச்சியை ஊக்குவிக்க இத்திட்டம் உதவுகிறது. மேலும் திருமண உதவி திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 25ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரையும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

24
மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் திட்டங்கள்

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன் திட்டங்கள், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை மையமாகக் கொண்டு, தமிழகம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. குழுக்களுக்கு ஆரம்ப நிதியாக ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படுகிறது. மானியமாக ரூ.10,000 வரை கிடைக்கும் வகையில் வழி செய்யப்படுகிறது. 

அடுத்ததாக தொழில் தொடங்க அல்லது விரிவாக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் உதவி திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் சுய உதவிக்குழுவினர் தொழில் தொடங்க உதவிடும் வகையில் கடன் உதவி திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 25 லட்சம் ரூபாயை குறைந்த வட்டியில் வழங்கப்படவுள்ளது.

34
25 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி திட்டங்கள்

இது தொடர்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO)வெளியிட்டுள்ள அறிவிப்பில் குழுக்கடன் திட்டம் ரூ. 25 லட்சம் வரை வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள மகளிர் மற்றும் ஆடவர் குழுவாக சிறு தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு குழுக்கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவி திட்டத்தில் குழு உறுப்பினர்கள் ஒருவருக்கு அதிகப்பட்சம் ரூ. 1.25 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் உதவி திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம் எனவும், கடனை திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் என கூறப்படுள்ளது.

ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டும் இருக்க வேண்டும் எனவும், குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

44
கடன் பெற தேவையான தகுதிகள்

பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்,

வயது: 1860 வரை

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை

அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்.

டாப்செட்கோவின் இணைந்தளம் - www.tabcedco.tn.gov.in

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்,

மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள் / கூட்டுறவு கடன் சங்கங்கள், ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்

சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ். குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை.

Read more Photos on
click me!

Recommended Stories