கொங்கு மண்டலத்தில் இருந்து அதிமுக முன்னாள் எம்எல்ஏவை தட்டித்தூக்கிய ஸ்டாலின்! அதிர்ச்சியில் இபிஎஸ்!

Published : Dec 03, 2025, 01:45 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், அண்ணா தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருந்த சின்னசாமி திமுகவில் இணைந்தார்.

PREV
14

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இபோதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் வருகையால் இம்முறை நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்க பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார். இதற்காக உடன்பிறப்பே வா எனும் பெயரில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

24

சந்திப்பின் போது, சட்டப்பேரவை தொகுதி வெற்றி நிலவரம், எஸ்ஐஆர் பணிகள், அரசு திட்ட செயல்பாடுகள், மாவட்ட அமைச்சர், தொகுதி பொறுப்பாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளுடன் உரையாடியுள்ளார். அதே நேரம், புகார்கள் வரும் பட்சத்தில் அது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் மாற்று கட்சியினர் ஆளும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

34

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் முக்கிய பிரமுகர்களான அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

44

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிங்கநல்லூர் தொகுதியில் 2006 மற்றும் 2011ஆம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அதுமட்டுமல்லாமல் அண்ணா தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories