தமிழக அரசு, தேர்தலுக்கு முன்னதாக மூன்று முக்கிய நலத்திட்டங்களைத் தொடங்கவுள்ளது. இந்தத் திட்டங்கள் டிசம்பர் மாதத்திலேயே செயல்படுத்தப்பட உள்ளன. இது திமுக அரசுக்கு மிக முக்கிய மைலேஜாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு மார்ச் தொடக்கத்தில் வெளியானதும் புதிய திட்டங்களை அறிவிக்கவும் செயல்படுத்தவும் தடை விதிக்கப்படும். இதனால், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகியவை மட்டுமே செயல்பாட்டு காலமாக இருக்கும் நிலையில், அரசு இந்த மாதத்திலேயே மூன்று முக்கிய நலத்திட்டங்களை துவக்க தயாராக உள்ளது.
26
மகளிர் உரிமைத்தொகை
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தற்போது 1 கோடி 14 லட்சம் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. பெண்களிடமிருந்து மிகுந்த வரவேற்பு பெற்ற இந்தத் திட்டத்தில் இருந்து விடுபட்ட உதவியை அரசு வழங்கியவர்களுக்கு. 28 லட்சம் பெண்கள் விண்ணப்பித்த நிலையில், ஆய்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தகுதியானவர்களுக்கான தொகை டிசம்பர் 15 முதல் வங்கிக் கணக்கில் சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதை அந்த நாளில் அரசு அறிவிக்கும்.
36
மாணவர்களுக்கு லேப்டாப்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, 20 லட்சம் கல்லூரி மாணவர்கள் லேப்டாப் பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏசர், டெல் மற்றும் ஹெச்பி நிறுவனங்கள் தயாரிப்பை முடித்துள்ளன. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் மார்ச் – ஏப்ரல் மாதத்தில் மாணவர்களிடம் சென்று சேரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். லேப்டாப் ஒன்றின் விலை ரூ.21,650 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை டிசம்பரிலேயே தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் செவ்வனே செயல்படும் நிலையில், இந்த ஆண்டு ரொக்க உதவி வழங்கப்படலாம் என அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு ரொக்க தொகை நிறுத்தப்பட்ட நிலையில், தேர்தல் நெருங்கும் சூழலில் அரசு மீண்டும் ஒரு உதவியை அறிவிக்கக்கூடும் என்ற அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. தலா ரூ.3,000 வழங்கினால் செலவு ரூ.6,800 கோடி, ரூ.6,000 வழங்கினால் ரூ.13,620 கோடி ஆகும். இறுதி முடிவு ஜனவரி முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
56
தமிழக அரசின் கவனம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், புதுமைப்பெண், விடியல் பயணம், காலை உணவு திட்டம் போன்ற பல நலத்திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. ஆனால் 2026 தேர்தலை முன்னிட்டு பெண்கள் மற்றும் இளைஞர்களை நேரடியாகச் சேரும் மூன்று பெரிய திட்டங்களை அரசு அவசரப்படுத்துகிறது. லேப்டாப், மகளிர் உரிமை விரிவாக்கம் மற்றும் பொங்கல் ரொக்க உதவி ஆகியவை மக்கள் ஆதரவை மாற்றக்கூடியவை என கருதப்படுகிறது.
66
டிசம்பர் தீர்மானிக்கும் மாதம்
தேர்தல் அறிக்கை வருவதற்கு முன் அரசு அறிவித்து செயல்படுத்தக்கூடிய கடைசி நேரம் இது. எனவே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த மூன்று மெகா திட்டங்களை டிசம்பரிலேயே தொடங்குவதற்குத் தீவிரம் காட்டுகிறது. தகுதி பட்டியல் வெளியீடு, லேப்டாப் வழங்கல் தேதி அறிவிப்பு, பொங்கல் ரொக்கத்தொகை உறுதி ஆகிய அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.