இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவில் பெண்கள் தமிழகத்தில் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் இன்னும் சுமார் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பணியை முடுக்கி விட்டுள்ளன. புதிய கூட்டணியை உருவாக்குவது, இருக்கின்ற கூட்டணியை பலப்படுத்துவது, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது, மக்களை சந்திப்பது என பணிகள் தீவிரமடைந்துள்ளன.
24
ஓங்கும் தவெக கை
திமுக, அதிமுக இடையேயான போட்டியில் தற்போது தமிழக வெற்றி கழகமும் இணைந்துள்ளது. இதுவரை ஒரு தேர்தலைக்கூட எதிர்கொள்ளாத தவெக தலைவர் விஜய் வரக்கூடிய தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று சொல்லி வருகிறார். தவெகவுக்கு பெரும்பாலான இளைஞர்களின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படும் நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்ததைத் தொடர்ந்து அக்கட்சிக்கு கூடுதல் பலம் ஏற்பட்டுள்ளது.
34
மெக்காவில் சிறப்பு பிரார்த்தனை
இதனிடையே இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என பெண்கள் பிரார்த்தனை மேற்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், “கோடிக்கணக்கான மக்கள் எங்கள் நாட்டில் விஜய் தலைமையில் TVK என்ற கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். அப்பொழுது தான் எங்கள் நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும் என்று நம்புகின்றனர்.
வரக்கூடிய 2026 தேர்தலில் TVK தலைவர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இந்த வெற்றி தனி மனிதனின் வெற்றி கிடையாது. நாட்டுக்கே கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அமையும்” என்று குறிப்பிட்டு பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.