தமிழகத்தின் முக்கிய வருவாய் துறையான பத்திரப்பதிவுத்துறை, டிசம்பர் 1ம் தேதி சுபமுகூர்த்த நாளில் புதிய சாதனை படைத்துள்ளது. அன்று ஒரே நாளில் முன்பதிவு வில்லைகளை அதிகரித்து இதுவரையில் இல்லாத அளவில் ரூ.302.73 கோடி வருவாய் ஈட்டி புதிய சாதனை.
தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கொட்டிக்கொடுக்கும் துறையாக இருப்பது டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவுதுறையாகும். குறிப்பாக 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 100 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெறுகிறது. வார விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் வருமானம் இரட்டிப்பாகும். அதுவும் பண்டிகை நாட்களான பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற நாட்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மது விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
25
பத்திரப்பதிவுத்துறை புதிய சாதனை
அதேபோல் பத்திரப்பதிவுத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. இந்நிலையில் இதுவரையில் இல்லாத வகையில் கடந்த டிசம்பர் 1ம் தேதி ஒருநாள் வருவாய் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
35
சுபமுகூர்த்த நாட்கள்
மக்கள் பெரும்பாலும் சுபமுகூர்த்த நாட்களில் வீடு, நிலம் போன்றவைகளை பத்திர பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் டிசம்பர் 1ம் தேதி வளர்பிறை சுபமுகூர்த்தம் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு கூடுதலாக தட்கல் முன்பதிவு வில்லைகளும் வில்லைகளுடன் 4 பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
அதன்படி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு வில்லைகளைப் பயன்படுத்தி கடந்த 1ம் தேதி ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் ரூ.302.73 கோடி வருவாய் அரசுக்கு ஈட்டப்பட்டுள்ளது.
55
டாஸ்மாக் Vs பதிவுத்துறை
இதன் மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். ஒரே நாளில் பதிவுத்துறை ரூ.302.73 கோடி வருவாய் ஈட்டி டாஸ்மாக் வருமானத்தை மிஞ்சி அசத்தியுள்ளது.