எதிர்பாராத ட்விஸ்ட்! இணைப்புக்கு நாள் குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர்! அதிர்ச்சியில் இபிஎஸ்! குஷியில் முதல்வர்!

Published : Feb 10, 2026, 08:44 AM IST

Nilofer Kafeel: முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில், கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் புறக்கணிப்பு காரணமாக திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
15
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியின் தலைவராக இருந்த நிலோபர் கபில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். கடந்த 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்த நிலோபர் கபிலுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது.

25
கே.சி.வீரமணி Vs நிலோபர் கபில் மோதல்

தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு வணிகவரித்துறை அமைச்சரும், ஜோலார்பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளருமான கே.சி.வீரமணிதான் காரணம் என நிலோபர் கபில் பகிரங்கமாக குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

35
அதிமுக இருந்து நீக்கம்

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறையப் பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் பண மோசடி செய்ததாக, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நிலோபர் கபிலின் உதவியாளர் பிரகாசம் புகார் அளித்தார். இதனையடுத்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிலோபர் கபில் நீக்கப்பட்டார்.

45
நிலோபர் கபில் திமுகவில் இணைய திட்டம்

பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்து அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அப்படி இருந்த போதிலும் கட்சி தலைமை கே.சி.வீரமணிக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வந்ததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிலோபர் கபில் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

55
முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜோலார்பேட்டை பொன்னேரியில் வரும் 14-ம் தேதி திமுக வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயற்சி மாநாடு நடைபெற உள்ளது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியின்போதுதான், முதலமைச்சர் முன்னிலையில் நிலோஃபர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி ஆளும் திமுகவில் இணைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories