10 ஆண்டுகாலம் ஆட்சிக்கு வராமல் இருந்த திமுக, 2021ல் ஆட்சியை பிடிக்க மிக முக்கிய காரணம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த திட்டம் பெண்களிடம் மிக அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது புதிதாக 16,94,339 பேர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
24
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பெண்கள் வாக்குகளை அள்ளுவதற்காக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வழங்கப்படும் தொகையை ரூ.1,000 ல் இருந்து ரூ.1,500 அல்லது ரூ.2,000 அதிகரிக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் மூத்த அமைச்சர் துரைமுருகன் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சர்கள் உறுதி
வேலூர் காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ''மகளிர் உரிமைத்தொகை உயருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது'' என்று பெண்களுக்கு மகிழ்ச்சியான தகவலை கூறியிருக்கிறார். ஏற்கெனவே கடந்த மாதம் அமைச்சர் ஐ.பெரிசாமியும் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படுவது குறித்து பேசியிருந்தார்.
34
பெண்களின் வாக்குகளை அள்ள திமுக பிளான்
''பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது'' திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியிருந்தார். 10 ஆண்டுகாலம் ஆட்சிக்கு வராமல் இருந்த திமுக, 2021ல் ஆட்சியை பிடிக்க மிக முக்கிய காரணம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த திட்டம் பெண்களிடம் மிக அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தான் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய திமுக அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும் அதிமுகவும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கு ரூ.2,000 வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆகவே திமுக அரசு மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மூத்த 2 அமைச்சர்களும் மகளிர் உரிமைத் தொகை உயரப்போவதாக தெரிவித்துள்ளனர். ஆகவே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசு சார்பில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.