துள்ளி குதிக்கும் விவசாயிகள்.! ரூ.1.20 லட்சத்தை மானியமாக அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிக்க அழைப்பு

Published : Aug 20, 2025, 09:28 AM IST

தமிழக அரசு விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, களையெடுக்கும் இயந்திரம் வாங்க 70% வரை மானியம் வழங்கப்படுகிறது. குதிரைத்திறனைப் பொறுத்து மானியத் தொகை மாறுபடும்.

PREV
14
விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள்

விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக விளைச்சல் அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில் விவசாயிகள் களை எடுக்கும் இயந்திரம் வாங்க 70 சதவிகிதம் வரை மானியத்தை அரசானது வழங்கி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 

வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தின் கீழ் விசை களையெடுப்பான்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 குதிரை திறன் முதல் 7.5 குதிரை திறன் கொண்ட இயந்திரம் வாங்க தமிழக அரசானது அதிகபட்சமாக 1.20 லட்சம் வரை மானியம் வழங்கி வருகிறது.

24
களை எடுக்கும் இயந்திரம் வாங்க மானியம்

7.5 மற்றும் அதற்கும் மேல் குதிரைத் திறன் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடிய இயந்திரங்கள் வாங்க, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1,19,000/- வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு

60% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10.2000/- வரையும் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 85,000/- வரையும் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 40% சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5. 68,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
விவசாயிகளுக்கு 70% வரை மானியம்

5 குதிரைத் திறன் முதல் 7.5 குதிரைத்திறனுக்குக் கீழ் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடியது இயந்திரம் வாங்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1,05000/- வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு

60% சதவீதம் அல்லது அதிகபட்சமாக . 90,000 மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 75,000/- வரை மானியமும், இதர விவசாயிகளுக்கு 40% சதவீதம் அல்லது அதிகபட்சமாக . 60,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

44
1.20 லட்சம் ரூபாய் மானியம்

2 குதிரைத் திறன் முதல் 5 குதிரைத்திறனுக்குக் கீழ் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடிய இயந்திரம் வாங்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 56.000/- வரை மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 60% சதவீதம் அல்லது அதிகபட்சமாக . 48,000 மானியமாக வழங்கப்படுகிறது.

 சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 40.000/- வரையும், இதர விவசாயிகளுக்கு 40% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 32,000/- வரை மானியமானது வழங்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories