திமுக கூட்டணி உடையப்போகுது.!! ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி

Published : Aug 05, 2025, 08:56 AM ISTUpdated : Aug 05, 2025, 08:57 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிமுக தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்' என்ற பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி, திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்.

PREV
15
தேர்தல் களத்தில் இறங்கிய அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இன்னும் 9 மாத காலம் உள்ள நிலையில் தற்போதே மக்களை சந்திக்க களம் இறங்கியுள்ளது. அரசியல் கட்சிகள், அந்த வகையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 

அந்த வகையில் தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என பிரச்சார பயணம் தற்போது தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லையில் பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திருநெல்வேலி அதிமுக கோட்டை என்று வருணபகவான் அருள்புரிந்து கூறிவிட்டார். பாளையங்கோட்டையிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு நீங்கள் அனுப்பிவைக்கவேண்டும்.

25
திமுக கூட்டணி உடையும்

திமுக தலைவர் ஸ்டாலின் போகிற இடமெல்லாம், 'திமுக கூட்டணி பலமான கூட்டணி' என்கிறார். எப்போது வேண்டுமானாலும் அந்த கூட்டணி உடையும். கூட்டணியை நம்பியிருப்பவர்கள் அவர்கள், நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம். நீங்கள் தான் எஜமானர்கள், கூட்டணி காலத்துக்கேற்ப மாறும், மக்கள் எடுக்கும் முடிவு நிலையானது. 

உங்கள் முடிவின்படி அதிமுக கூட்டணி வெல்லும். திமுக ஆட்சிக்கு வந்து 50 மாத காலமாகிவிட்டது. மக்கள் படுகின்ற துன்பம் ஏராளம். விவசாயிகள், ஆசிரியர்கள் என எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தளவுக்கு துன்பம். 525 அறிவிப்புகளை வெளியிட்டு 98% நிறைவேற்றினோம் என்று பச்சைப் பொய் சொல்கிறார்கள்.

35
திமுகவை வீழ்த்துவதே எங்கள் நோக்கம்

திமுக அவர்கள் குடும்பத்துக்கான வருமானத்தை தான் பார்ப்பார்கள். எப்போது பார்த்தாலும் மத்திய அரசை குறை சொல்கிறார்கள். திமுக மத்தியில் 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். எதுவும் செய்யாமல் இப்போது பாஜக எதுவும் செய்யவில்லை என்று பரப்புரை செய்கிறார். 

உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை ஏன் பயன்படுத்தவில்லை? அதிமுக மற்றும் பாஜகவுக்கும் திமுகவை வீழ்த்துவதே ஒரே நோக்கம். அதற்காகவே கூட்டணி அமைத்திருக்கிறோம். பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்தவுடன் திமுக கூட்டணி ஜெயிக்காது என்ற பயம் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. அதிமுக பாஜக கூட்டணி வெல்லும் என்று ஸ்டாலினே நம்பிவிட்டார்.

45
உறுப்பினர் சேர்க்கை- திமுக பிச்சை

மக்கள் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது. அதனால்தான் இப்போது வீடு வீடாகச் சென்று ஓரணியில் தமிழ்நாடு என்று உறுப்பினர் சேர்க்கைக்கு பிச்சை எடுக்கிறார்கள். தொண்டர் இல்லாத கட்சி என்ற பரிதாபமான நிலைக்கு திமுக போய்விட்டது. ஓடிபி விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்தது. அதற்கு மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றம் சென்றார்கள், அங்கேயும் தள்ளுபடி செய்துள்ளனர். அதிமுக ஆட்சியில் வறட்சி, புயல் வந்தபோதும், கொரோனா காலத்திலும் விலைவாசி உயரவில்லை. இன்று எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. மக்கள் தவிக்கிறார்கள்.

55
பைபை ஸ்டாலின்- எடப்பாடி

திமுக பாரம்பரியக் கட்சி என்கிறார்கள், ஆனால், சொத்துகளை விற்று கட்சி வளர்த்தவருக்கு இடமில்லை. திமுகவில் வாரிசுக்குத்தான் பதவி கிடைக்கும். ஸ்டாலின் கட்சி தலைவர், உதயநிதி இளைஞரணி தலைவர். கனிமொழி மகளிரணி தலைவர், முடிஞ்சுபோச்சு, எல்லா பொறுப்பும் குடும்பத்துக்கே போச்சு. அதிமுகவில் அப்படியல்ல சாதாரண கிளைச் செயலாளர்கூட பொதுச்செயலாளர் ஆக முடியும். முதல்வர் ஆக முடியும். அதிமுக சரியான பாதையில் செல்கிறது.. 

திறந்துவைக்கப்பட்ட பாளையங்கோட்டை டார்லிங் நகரில் உள்ள 8 உள் விளையாட்டு அரங்குகள் பல மாதமாக பூட்டிக்கிடக்கிறது. திருநெல்வேலி மக்களுக்காக 37 கோடியில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்ட இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை. இவையெல்லாம் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றிக் கொடுக்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Read more Photos on
click me!

Recommended Stories