புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்த நாள் விழா புதுவை முழுவதும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு அல்லாத உயர்கல்விகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
23
10 சதவீத இடஒதுக்கீடு
அதன்படி கால்நடை, வேளாண்மை, தோட்டக்கலை, நர்சிங் உள்ளிட்டப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரலாம். இதற்கு தகுதி பெற மாணவ, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும்.
33
மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்
அந்த வகையில், 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவ, மாணவிகளின் கல்விச் செலவை காமராஜர் கல்வி நிதியின் கீழ் அரசே ஏற்கும். மேலும் இந்த உத்தரவு நடப்பு கல்வியாண்டு முதலே அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.