நள்ளிரவில் பயங்கரம்! பாஜக பிரமுகர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! பதற்றம்! போலீஸ் குவிப்பு!

Published : Apr 27, 2025, 12:42 PM ISTUpdated : Apr 27, 2025, 12:43 PM IST

BJP Leader Murder: புதுச்சேரி பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

PREV
14
நள்ளிரவில் பயங்கரம்! பாஜக பிரமுகர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! பதற்றம்! போலீஸ் குவிப்பு!
puducherry bjp leader

BJP Leader Murder: புதுச்சேரியில் கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உமா சங்கர் (40). இவர் புதுச்சேரி மாநில பாஜகவின் இளைஞரணி துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இவர்கள் மீது தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மாட்டினுக்கு இன்று பிறந்தநாள் விழாவையொட்டி பல்வேறு ஏற்பாடுகளை உமாசங்கர் செய்து வந்தார். 

24
bjp leader Murder

இந்நிலையில் நள்ளிரவில் ஏற்பாடுகளை பார்வையிட இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த உமாசங்கரை மர்ம கும்பல் பின்தொடர்ந்து வந்து திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உமாசங்கர் தப்பிக்க முயற்சித்த போது அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

34
police investigation

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த லாஸ்பேட்டை போலீசார் உமாசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கொலை குற்றவாளிகளை  கைது செய்ய வேண்டும் என  அவரது உறவினர்கள் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். 

44
Murder Case

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories