புதுச்சேரி சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.! இனி இரவு 12 மணி வரை திறந்திருக்கும்- அரசு அறிவிப்பு

Published : Feb 18, 2025, 09:02 AM IST

புதுச்சேரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வரும் நிலையில், புதுச்சேரியில் இரவு 12 மணி வரை சிறு உணவகங்கள் திறந்திருக்கலாம் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 

PREV
14
புதுச்சேரி சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.! இனி இரவு 12 மணி வரை திறந்திருக்கும்- அரசு அறிவிப்பு
புதுச்சேரி சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.! இனி இரவு 12 மணி வரை திறந்திருக்கும்- அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி என்றாலே இளைஞர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கொண்டாட்டம் தான், மினி கோவா என்றே அழைப்பார்கள். வார இறுதி நாள் என்றாலே நண்பர்களோடு புதுச்சேரிக்கு சுற்றுலா புறப்பட்டு விடுவார்கள். அந்த அளவிற்கு கொண்டாட்டத்திற்கு பெயர் பெற்ற ஊராகும். அழகிய பீச், பிரெஞ்ச் கட்டிடங்கள், மதுபான விடுதி, பலவகையான கடல் உணவுகள் கிடைக்கும். அதைவிட மதுபானம் விலை மிகவும் குறைவு என்பதால் இளைஞர்களின் கொண்டாட்டத்திற்கு ஏற்ற ஊராக புதுச்சேரி உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இரவு 12 மணி வரை சிறு உணவகங்கள் திறந்திருக்கலாம் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார், 

24
பாலியல் புகார்- கடும் நடவடிக்கை

புதுச்சேரி காவல் துறை தலைமையகத்தில் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்துசெய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பள்ளி சிறுமி பாலியல் பாதிப்பு தொடர்பான வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஒரு சில அரசியல் கட்சிகள் அரசியல் சுயலாபத்துக்காக, உள்நோக்கத்துடன் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள் என தெரிவித்தார்.

பாலியல் புகார்களை மாணவிகள் தெரிவிக்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காவல் துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்க ஏற்பாடு செய்யப்படும், அப்படி புகார் மனு செலுத்தினால் உடன் நடவடிக்கை எடுக்க ஆலோசித்துள்ளோம் என கூறினார். 

34
நாராயணசாமி மீது சட்ட நடவடிக்கை

தொடர்ந்து பேசியவர் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சியிலும் பல குற்றங்கள் நடந்துள்ளதாகவும் தன்னையும், பேரவைத்தலைர், முதலமைச்சர் ஆகியோரை பள்ளி விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் சொல்வதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும்,  அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்புவதை நாராயணசாமி நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 புதுச்சேரியில் ரவுடிகளை கட்டுப்படுத்த ஏற்கெனவே ஆப்ரேஷன் திரிசூல் மூலம் குற்றச்செயலில் ஈடுபடுவோரை வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரிக்கிறோம். விரைவில் ஆப்ரேஷன் வேட்டை என புதிய திட்டத்தை காவல்துறை தொடங்குகிறது என கூறினார். 

44
இனி இரவு 12 மணி வரை திறந்திருக்கும்

புதுச்சேரியில் தற்போது  இரவு 11 மணி வரை மட்டும் சிறு கடைகள் சாலையோர உணவகங்கள் திறந்திருக்க காவல் துறை கட்டுப்பாடு விதிதுள்ள நிலையில், இனி இரவு 12 மணி வரை சாலையோர உணவகங்கள், சிறு கடைகளை திறக்க  அனுமதிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் உணவு கிடைக்காமல் சிரமப்படும் நிலை தவிர்க்க வாய்ப்பு உருவாகியுள்ளது. 

click me!

Recommended Stories