120 மது பாட்டில்களை நூதன முறையில் கடத்தி வந்த நபர்! சுற்றி வளைத்துப் பிடித்த போலீஸ்!

Published : Feb 16, 2025, 12:11 AM IST

Liquor Smuggling from Puducherry: புதுச்சேரியில் இருந்து நூதன முறையில் 120 மது பாட்டில்களைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உடல் முழுவதும் பாட்டில்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.

PREV
14
120 மது பாட்டில்களை நூதன முறையில் கடத்தி வந்த நபர்! சுற்றி வளைத்துப் பிடித்த போலீஸ்!
Man arrested for smuggling liquor

புதுச்சேரியில் மதுபானங்கள் தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளை விடக் குறைவான விலையில் விற்கப்படுகிறது. இதனால் அங்கிருந்து மது பாட்டில்களை கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் ஒருவர் நூதன முறையில் மதுபானங்களைக் கடத்தி வந்து சிக்கியுள்ளார்.

24
Puducherry Liquor

சனிக்கிழமை புதிய முறையில் மது பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகமணி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

34
Liquor Smuggling

கைதான நாகமணி தன்னுடைய உடல் முழுவதும் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்துள்ளார். வயிறு, இடுப்பு,முதுகு, தொடை, கால்கள் முழுவதும் மொத்தம் 120 பாட்டில்களை வைத்து அவற்றை டேப் போட்டு உடலோடு ஒட்டி எடுத்து வந்துள்ளார்.

44
TASMAC Liquor

சந்தேகத்தின் பேரில் நாகமணியைப் பிடித்து சோதனையிட்ட போலீசார் உடல் முழுவதும் பாட்டில்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், நாகமணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories