government employee
புதுச்சேரியில் குரூப் ஏ, பி அதிகாரிகள் ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்வது அவசியம். முக்கியமாக, பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் ஓய்வூதியச் சலுகைகளுக்கு ஆண்டுதோறும் அதிகாரிகளால் சொத்துகளை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முக்கியமாக ஊழலைத் தடுப்பதும், அரசு ஊழியர்களின் சொத்துகளைக் கண்காணிப்பதும், அவர்களின் சொத்துகளை அவர்கள் அறிந்த வருமான ஆதாரத்திற்கு ஏற்றவாறு அடையாளம் காண்பதற்கும் உதவும்.
puducherry government
இந்நிலையில் புதுச்சேரி அரசுத்துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் தங்களது அசையா சொத்து கணக்கு விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ம் தேதிக்குள் சொத்து கணக்கை சமர்பிக்க வேண்டும். ஆனால் 60 சதவீத அதிகாரிகள் மட்டுமே சொத்து கணக்கு தாக்கல் செய்தனர். 40 சதவீதம் பேர் தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
government employee
இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் கண்ணன் அனைத்து துறைகளுக்கும் முக்கிய சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வருகிற 31-ம் தேதிக்குள் அதிகாரிகள் தங்களது அசையா சொத்து விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. ஆன்லைன் சமர்ப்பிப்பின் நிலையை ஆய்வு செய்ததில் பல அதிகாரிகள் இன்னும் தங்களது சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.
Central Government
அனைத்துத்துறை அதிகாரிகளும் தங்கள் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு கடைசி தேதிக்கு முன்பே விவரங்களை சமர்ப்பிக்க தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் விவரங்களை சமர்ப்பிக்க தவறினால் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து விதமான பயன்களுக்கும் அரசின் தலைமை கண்காணிப்பக அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
government employee
சமீபத்தில் அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.