PM Modi
நாடு முழுவதும் பொதுமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது போல பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த திட்டம் கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
APAAR
இதன்படி மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்களின் அனுமதியும் அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த அட்டைக்கு அபார் (Automated Permanent Academic Account Registry-APAAR) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை என அழைக்கப்படுகிறது.
Automated Permanent Academic Account Registry
இது தொடர்பான சுற்றிக்கையை நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இதுதொடர்பாக பெற்றோர்களை அழைத்துப் பேசி அனுமதி பெறும் நடவடிக்கையை தொடங்கும்படி கூறப்பட்டது. இதனையடுத்து அடையாள அட்டை பணியை பல மாநிலங்கள் தொடங்கியுள்ளன. பல்வேறு காரணங்களால் அபார் அட்டைக்கான விவரங்களை பள்ளிகள் திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
Puducherry School student
இந்நிலையில் புதுச்சேரியிலும் அபார் தனித்துவ அட்டை எண்ணை மாணவர்களுக்கு வழங்கும் பணி துவங்க அனைத்து பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த பணியை வரும் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தற்போது சுற்றிக்கையை அனுப்பியுள்ளது.