பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

Published : Jan 03, 2025, 06:40 PM IST

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், பொதுமக்கள் எதிர்பார்த்த ரூ.1000 ரொக்கம் குறித்த அறிவிப்பு இல்லை. 

PREV
14
பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Government

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து கிடந்தனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. 

24
Pongal Festivel

அதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இலங்கை தமிழர் மறு வாழ்வுழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

34
Pongal Gift

ரேஷன் கடைகளில் ஜனவரி 9-ம் தேதியில் இருந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரூ.1000 ரொக்கம் தொடர்பான அறிவிப்பு இடம் பெறவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.  மேலும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் பொங்கல் பரிசு ரொக்கம் ரூ.1000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

44
Puducherry Government

ஆனால்,  புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.750 ரொக்கம் கொடுக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!

Recommended Stories