புதுச்சேரியை சேர்ந்த ஆரோவில் நிறுவனம் 7 குஜராத் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அது என்னென்ன நிறுவனங்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.
புதுச்சேரியில் உள்ள ஆரோவில் நிர்வாகம் குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 7 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக் குழுவினர், தொழில்முனைவோர் உள்ளிட்ட 11 பேரை கொண்ட குழுவினர் கடந்த 3ம் தேதி குஜராத் மாநிலத்துக்குச் சென்று ஆரோவில் செயல் திட்டங்கள் மற்றும் சிறப்புகள் குறித்து அங்குள்ள பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சி நிர்வாகங்களிடம் விளக்கமளித்தனர்.
24
Auroville Gujarat companies
50,000 பேர் வசிக்க வேண்டும்
7ம் தேதி வரை அங்கு இருந்த அவர்கள் குஜராத் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 7 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீதாராமன், நிர்வாகக் குழுவைச் சேர்ந்த அனு மஜும்தார், சஞ்சீவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''1968ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆரோவில் சர்வதேச நகரில் 50,000 பேர் வசிக்க வேண்டும் என்பதே அன்னையின் விருப்பம்.
தற்போது 3,000 பேர்களே ஆரோவில் வசிப்பதால் சர்வதேச நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மேலும் பலரை ஆரோவில் நகருக்குள் கொண்டுவரும் முயற்சியை ஆரோவில் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் முதற்கட்டமாக ஆரோவில் அறக்கட்டளைச் செயலர் ஜெயந்தி எஸ்.ரவி வழிகாட்டுதலின்படி குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகம், காந்திநகர் காமதேனு பல்கலைக்கழகம், இந்தூஸ் பல்கலைக்கழகம், சூரத் ஆரோ பல்கலைக்கழகம், சர்தார் வல்லபபாய் படேல் பல்கலைக்கழகம், குஜராத் வருவாய்த் துறை, நேரு அறக்கட்டளை மேம்பாட்டு மையம் உள்ளிட்ட 7 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.
44
Auroville
ஆரோவிலில் சென்னை ஐஐடி மையம்
தொடர்ந்து பேசிய அவர்கள், ''குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களையும் ஆரோவில் சர்வதேச நகருக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம். இது மட்டுமின்றி ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஆரோவிலில் சென்னை ஐஐடி மையம் அமைப்பது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆரோவிலில் பல்கலைக்கழகம் அமைக்க நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால் அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆரோவில் சர்வதேச நகருக்குள் சுற்றுச்சாலை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது'' என்று கூறியுள்ளனர்.