மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எச்சரிக்கையுடன் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

Published : Jan 31, 2025, 08:44 AM ISTUpdated : Jan 31, 2025, 08:58 AM IST

புதுவையில் தனியார் பள்ளிகள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து, கல்வித்துறை தடை விதித்துள்ளது. 

PREV
15
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எச்சரிக்கையுடன் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எச்சரிக்கையுடன் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

10, 11, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் என்பது ரொம்ப முக்கியம். இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர். குறிப்பாக 
12ம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தே எந்த மாதிரியான படிப்புகளில் சேரலாம் என்பதை தீர்மானிக்க முடியும். இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும், பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி மற்றும் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே  தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறது. குறிப்பாக விஷேச நாட்கள், ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறது. 

25
School Student

இந்நிலையில் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கல்வித்துறைக்கும் புகார்கள் பறந்தன. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாலை 6 மணிக்கு மேல் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

35
Special classes

இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: புதுவை யூனியன் பிரதேசத்தில் இயங்கும் சில தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்தும், வார விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை அளிக்கும் தினங்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக கவனத்துக்கு வந்துள்ளது. இது மாணவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

45
Director of school Education Department

எனவே பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதன்படி எந்த ஒரு தனியார் பள்ளியும் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் மற்றும் பிற திறன் சார்ந்த வகுப்புகளை நடத்தக்கூடாது. அதேபோல் வார விடுமுறை, பொதுவிடுமுறை, அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களிலும் இத்தகைய வகுப்புகளை நடத்தக்கூடாது. 

55
Private Schools

இந்த விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். இதில் ஏதேனும் விதிமுறை மீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories