சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை.! பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே.? கேள்வி கேட்கும் எடப்பாடி

First Published | Jan 16, 2025, 8:55 AM IST

சென்னை ஐஐடி கேன்டீனில் தேநீர் அருந்தச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாணவிகள் பாதுகாப்பு எங்கே என எடப்பாடி பழனிசாமி கேள்வி

sexual harassment

மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த குற்ற வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

இதனையடுத்து புதுச்சேரியில் பல்கலைக்கழக மாணவிக்கும் பாலியல் தொல்லை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மீண்டும் சென்னையில் அதுவும் சென்னை ஐஐடி கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் கொடுமை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

IIT Chennai student

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி கல்லூரிக்கு அருகில் உள்ள கேண்டீனில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியிடம்  உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஐஐடி மாணவி அளித்த புகாரையடுத்து கேண்டீனில் பணியாற்றிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராமை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tap to resize

EPS

பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே.?

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், சென்னை ஐஐடி கேன்டீனில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அச்ச நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளிய தமிழ்நாடு அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி,

Sexual harassment

கடும் நடவடிக்கை

பெண்கள் கல்வியே சமூகத்தை உயர்த்தும்; அவர்கள் அதைப் பெறுவதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட வேண்டியது தங்கள் தலையாயக் கடமை என்பதை மத்திய மாநில அரசுகளும்; கல்லூரி நிர்வாகங்களும் உணரவேண்டும். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவன் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன்; இனியேனும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை தமிழ்நாட்டில் அமைத்திடுமாறு திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Latest Videos

click me!