tomato onion
தக்காளி, வெங்காயம் விலை
சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகளாகும், அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தை தான் மக்கள் அதிகளவு வாங்குவார்கள். என்ன சமைப்பதாக இருந்தாலும் இந்த இரண்டு காய்கறிகள் முக்கிய இடம்பெறும். அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்தால் அவ்வளவு தான் சமையலில் ருசியும் குறைந்து விடும். அதற்கு ஏற்றார் போல் தக்காளி விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி
இதே போல வெங்காயத்தின் விலையும் போட்டி போட்டு உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாயை தொட்டது. ஒரு சில நாட்களிகளில் 100 ரூபாயையும் கடந்தது. வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது முக்கிய காரணமாக கூறப்பட்டது. மேலும் மழை பாதிப்பால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதும் காரணமாக இருந்தது. எனவே தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் படி ஒரு கிலோ 35 ரூபாய் 40 ரூபாய் என்ற அளவில் மக்கள் கூடும் பகுதிகளிலும் பண்ணை பசுமை மையங்களில் விற்பனை செய்யப்பட்டது.
விளைச்சல் அதிகரிப்பு - விலை குறைவு
இருந்த போதும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதால் மற்ற ஊர்களில் உள்ள மக்களுக்கு குறைவான விலையில் தக்காளி மற்றும் வெங்காயம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வரத்து அதிகரித்தால் மட்டுமே தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதற்கு ஏற்றார் போல் தக்காளி வரத்தும், காரிப் பருவ காய்கறிகளான வெங்காய வரத்தும் அதிகரித்தது. இதனையடுத்து விலையானது சரசரவென குறைந்தது.
குறைந்தது தக்காளி விலை
அந்த வகையில் தக்காளி வரத்து அளவுக்கு அதிகமாக அதிகரித்ததால் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெங்காயத்தின் விளைச்சலும் அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனையானது. விலை உயர்வால் கவலை அடைந்திருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Vegetables Price Koyembedu
காய்கறி விலை உயர்வு
அதே நேரத்தில் மற்ற காய்கறிகளின் விலையும் கிடு, கிடுவென அதிகரித்துள்ளது. இதன் படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Vegetables Price Today
ஒரு கிலோ இவ்வளவா.?
கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50-க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்தநிலையில் தக்காளி விலையானது சற்று அதிகரித்து ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது