ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்! என்ன காரணம்?

Published : Jan 15, 2025, 08:16 PM ISTUpdated : Jan 15, 2025, 08:27 PM IST

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

PREV
14
ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்! என்ன காரணம்?
Vaithilingam

அதிமுகவில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான உள்ளார். தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.  கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

24
AIADMK

இதனையடுத்து இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த செப்டம்பர் 19-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து வைத்திலிங்கம் தொடர்புடைய 13 இடங்களில் அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

34
Enforcement Directorate

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தற்போது பாஜகவிற்கு ஆதரவாக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தோடு நெருக்கமாக உள்ள நிலையில் நடைபெற்ற இந்த சோதனை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 2 நாட்கள் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

44
Assets Frozen

இந்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சுமார் 100 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் வைத்திலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories