துர்கா ஸ்டாலின் மட்டும் தான் மிச்சம் இருந்தாங்க.. இப்போ அவங்களும் அரசியல் மேடைக்கு வந்துட்டாங்க- எடப்பாடி

Published : Jul 25, 2025, 08:10 AM IST

அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் எடப்பாடி விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

PREV
15
தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல் ஆளாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்திய அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்தாக தமிழகம் முழுவதும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. நேற்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 

25
மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம்

அதிமுக ஆட்சிக்காலத்தில் கம்மாய்கள் குளங்கள் நிரம்புவதற்கு குடி மராமத்து பணிகள் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனை இரண்டு முறை தள்ளுபடி செய்துள்ளோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் 24 மணி நேரமும் மும்மூனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் ஷிப்ட் முறையில் தண்ணீர் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் மாணவர்கள் ஆகியோர் கஞ்சாவிற்கு அடிமையாகி சீரழிந்து கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா என கேள்வி எழுப்பினார். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமாக இருப்பது என்று தமிழகத்தில் மட்டும்தான் என விமர்சித்தார்.

35
திமுவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு.?

திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக 525 வாக்குறுதிகளில் 10% மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். மீதமுள்ளவை நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்று திமுக கூறியது ஆனால் நான்கு ஆண்டுகள் ஆகியும் உயர்த்தவில்லை. விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள் ஆனால் ரத்து செய்தார்களா ? மாதம் மின் கட்டணம் கணக்கெடுப்பு என்று கூறினார்கள் அதை செய்தார்களா.? கேஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.100 மானியம் கொடுப்பேன் என்று கூறினார்கள் கொடுத்தார்களா.? 

பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியது அதை செய்தார்களா.? நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள் ரத்து செய்தார்களா.? என அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார்.

திமுகவின் நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதியை நம்பி 25 மாணவர்கள் இறந்தது தான் மிச்சம். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திட்டமிட்டு பொய்யான வாக்குறுதியை நீட் தேர்வு ரத்து என்று கூறி வாக்கு பெற்றனர் ஆனால் அதை செய்யவில்லை. இப்படிப்பட்ட அரசு தேவையா.?

45
திமுகவிற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது

வீடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவலுக்கு 100% கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. உண்மையை கூறினால் எடப்பாடி பழனிச்சாமி என்னவோ பேசுகிறார் என்று ஸ்டாலின் கூறுகிறார் நான் உண்மையை தான் பேசுகிறேன். குறையை எடுத்துக் கூறுவது எதிர்க்கட்சியின் கடமை. அதை தான் நாங்கள் செய்கிறோம். இல்லை என்று நீங்கள் கூற முடியுமா என விமர்சித்தார்.

 மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து வைத்தனர் அதற்காகத்தான் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். இதன் காரணமாகவே திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. நாங்கள் கூட்டணி வைத்தால் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். அதிமுக சரியான பாதையில் தான் செல்கிறது சரியான கூட்டணி அமைத்துள்ளோம்.

55
அரசியல் மேடையில் துர்கா ஸ்டாலின்

மக்கள் 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார்கள். திமுக அரசு வந்த பிறகு தாலிக்கு தங்கம் அம்மா இருசக்கர வாகனம் திட்டத்தை திமுக நிறுத்திவிட்டது. இதுதான் திமுக அரசின் சாதனை, 2000 அம்மா மினி கிளினிக் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது ஆனால் அதை மூடியது தான் திமுகவின் சாதனை. திமுக உலக முதலீட்டாளர்மாநாடு நடத்தியது எவ்வளவு முதலீடு வந்துள்ளது வேலை வாய்ப்பு எவ்வளவு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கைகேட்டால் இதுவரை அவர்கள் கொடுக்கவில்லை. 

தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்று வருகிறார் இதுவரை யாரோடு இருந்தார் என்று தெரியவில்லை. தற்போது தான் உங்களோடு முதல்வர் வந்துள்ளார். தேர்தலுக்காக இந்த செயலை ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். துர்கா ஸ்டாலின் மட்டும்தான் அவர்கள் குடும்பத்தில் பேசாமல் இருந்தார்கள் தற்போது அவர்களும் அரசியலில் மேடையில் பேச தொடங்கி விட்டார்கள். திமுக அரசு ஃபெயிலியர் மாடல் அரசு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories