TASMAC overcharging seller suspension : தமிழகத்தில் மது விற்பனை தான் பணத்தை கொட்டு கொட்டு என கொட்டுகிறது. அந்த வகையில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகள் தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த கடைகளில் முற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் நாள் தோறும் 100 முதல் 120 கோடி ரூபாயும், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் 150 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதால் அரசின் திட்டங்களை செயல்படுத்த பெரிதும் உதவியாக உள்ளது.
tasmac
இந்த நிலையில் மதுபானக்கடைகளில் மது விற்பனையின் போது கூடுதலாக பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. அதன் படி ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் இந்த பணம் எங்கே செல்கிறது எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை டிஜிட்டல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இந்த நடைமுறையானது அமலில் உள்ளது. இதனால் கூடுதல் பணம் வசூலிப்பது தடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வாணிபக்கழகத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் டாஸ்மாக் அரசு மதுபான சில்லறை விற்பனை கடையில் மதுபானத்தை அரசு நிர்ணய விலையான 200 ரூபாயை விட கூடுதலாக 40 ரூபாய் சேர்த்து க 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மதுபானத்திற்கு தற்போதைய விலையான 220 ரூபாய் மற்றும் ஸ்டிக்கர் விலை 10 ரூபாய் சேர்த்து 230 ரூபாய்க்கு பதிலாக 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
tasmac
எனவே விற்பனையாளர் மகேஸ்வரன் டாஸ்மாக் கடையில் விதிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது தெரியவருகிறது. எனவே கூடுதல் விலைக்கு விற்பனையில் ஈடுபட்ட விற்பனையாளர் மகேஸ்வரன் என்பவரை டாஸ்மாக் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விசாரணை எதிர்நோக்கும் வகையில் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானக்கடைகளில் கூடுதலாக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.