திருச்செந்தூர், ராமேசுவரத்தை அடுத்து பழநி முருகன் கோவிலில் பக்தர் உயிரிழப்பு! கலங்கிய அண்ணாமலை!

Published : Mar 20, 2025, 08:59 AM ISTUpdated : Mar 20, 2025, 11:52 AM IST

திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழநி ஆகிய கோவில்களில் பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழந்தனர்.

PREV
15
திருச்செந்தூர், ராமேசுவரத்தை அடுத்து பழநி முருகன் கோவிலில் பக்தர் உயிரிழப்பு! கலங்கிய அண்ணாமலை!
Tiruchendur Murugan Temple

முருகனின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடு திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஓம்குமார் என்பவர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது . 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த போது மூச்சு திணறல் எற்பட்டு உயிரிழந்தார்.  

25
Rameshwaram temple

அதேபோல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் கடந்த 18ம் தேதி ஸ்படி லிங்கம் தரிசனம் செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்ற பக்தர் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் ஐயப்ப பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அடுத்த அதிர்ச்சி!

35
palani murugan temple

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த செல்வமணி (47), தனது நண்பர்களுடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை பழநி முருகன் கோயிலுக்கு வந்துள்ளனர். ரோப்கார் மற்றும் மின்சார இழுவை ரயில் சேவைகள் இருந்தும் படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு ரூ.10 கட்டண தரிசன வரிசையில் காத்திருந்த போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

45
Devotee

இதனையடுத்து மலைக்கோயிலில் உள்ள மருத்துவ உதவி மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ரோப் கார் மூலம் அடிவாரத்துக்கு அழைத்து வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் பழநி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர், ராமேசுவரம், பழநி கோவில்களில் அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

55
Annamalai

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் செல்வமணி அவர்கள், பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும். நாமக்கல் மாவட்ட பாஜக செல்வமணி அவர்கள் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories