இரவோடு இரவாக டெல்லி சென்று வந்த கையோடு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி முடிவு!

Published : Mar 20, 2025, 07:53 AM ISTUpdated : Mar 20, 2025, 07:59 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

PREV
15
இரவோடு இரவாக டெல்லி சென்று வந்த கையோடு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி முடிவு!
Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மார்ச் 6 ,7, 8 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 

25
TASMAC

இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் இருந்து பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்தது. மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேடுகள், உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள், பார் உரிமை டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

35
TASMAC Scam

குறிப்பாக மதுபானங்களை ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை அதிக விலை வைத்து விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள், அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக் அதிகாரிகளின் உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.  முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

45
Chennai High Court

இந்நிலையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் மாநில அரசின் அனுமதியின்றி டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில்  நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களையோ துன்புறுத்துவதை அனுமதிக்கக் கூடாது. 

55
Minister Senthil Balaji

கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக  டெல்லி சென்ற வந்த கையோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories