அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் கையில் முக்கிய கடிதம்

Published : Mar 20, 2025, 07:48 AM ISTUpdated : Mar 20, 2025, 07:50 AM IST

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

PREV
16
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் கையில் முக்கிய கடிதம்
tamilnadu government

TN govt employees protest : தமிழக அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பது அரசு ஊழியர்கள், எனவே அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது. இந்த நிலையில் பழைய ஓய்வூதியம், சரண் விடுப்பு, பணியாளர் நியமனம். ஊதியம் உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசோடு அரசு ஊழியர்கள் சங்கம் பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.

இதன் படி பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தது. ஆனால் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வெளியாகவில்லை. அரசு ஊழியர்களுக்கு சரண் விடுப்பு சலுகையானது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

26
old pension scheme

மேலும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் அரசு ஊழியர்கள் சங்கங்களான FOTA-GEO ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று  (19.03.2025) தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கூட்ட அரங்கில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் த.அமிர்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டல் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

36
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வுதியத் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு அரசு நிதி பற்றாக்குறையினால் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்விடுப்பு சலுகையினை 01.04.2026-இல் பணமாக்கிக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டு இருப்பதை ரத்து செய்து விட்டு, 01.04.2025-ல் பணமாக்கிக் கொள்ளலாம் என ஆணை வழங்கி உதவிட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.

46
நிலுவைத்தொகையை வழங்கிடுக

தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத்தொகையினை பணியாளர்களுக்கு வழங்காமல், நிலுவையாக உள்ளதால், அதனை விடுவித்து 21 மாத நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டுமாய் இக்கூட்டமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.  

01.06.2009 முதல் பணியேற்று 7-வது ஊதியக்குழுவின் மூலம் ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு ஓராண்டுகாலம் இடைவெளியில் சுமார் ரூ.15,000/-க்கும் குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களைந்து உரிய ஊதியம் வழங்கிட வேண்டுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
 

56
காலிப்பணியிடங்களை நிரப்பிடுக

தலைமைச்செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலிப்பணியிடங்களையும் நிரப்பி, பதவி உயர்வினையும் வழங்க வேண்டுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. தமிழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் 7, 14, 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு மருத்துவர்களுக்கு வழங்குவதைப்போல் முறையே நிலை-III, (Level-12) -II (Level-15), -1 (Level-16) ញ ប្រស់ உயர்வு (Time Bounded Promotion) வழங்கிட வேணுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது

66
போராட்டத்திற்கு தேதி குறித்த ஊழியர்கள்

இதனை தொடர்ந்து இக்கோரிக்கைகள் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்காக எதிர்வருகின்ற 24.03.2025 அன்று மாவட்ட அளவில் அனைத்து சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு அமைத்து கூட்டம் நடத்துதல். 03.04.2025 அன்று மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 5 மணிக்கு நடத்துவது என முடிவு செய்கிறது.  25.04.2025 அன்று மாநில அளவிலான முழுநேர கோரிக்கை தர்ணா போராட்டம் நடத்துவது என இக்கூட்டம் மூலம் முடிவு செய்கிறது என முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது. 

Read more Photos on
click me!

Recommended Stories