கொத்தாக 20ஆயிரம் பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ் - அதிரடியாக வெளியான அறிவிப்பு

Published : Mar 19, 2025, 02:10 PM ISTUpdated : Mar 20, 2025, 10:29 AM IST

சென்னையில் 20,000+ வேலைகளுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 29, 2025 அன்று நடைபெற உள்ளது. 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம்.

PREV
15
கொத்தாக 20ஆயிரம் பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ் - அதிரடியாக வெளியான அறிவிப்பு

Tamil Nadu jobs : வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன் படி சென்னையில் 20 ஆயிரம் பேரை பணிக்கு தேர்வு செய்யும் வகையில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

25
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29.03.2025 அன்று நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் (Government Arts College, Nandanam) காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடத்தப்படவுள்ளது. 

35
20ஆயிரம் காலிப்பணியிடம்

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 20000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி. பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.

45
இளைஞர்களுக்கு அழைப்பு

இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு. மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக அனைவரும்www.tnprivate jobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

55
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு

தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இம்முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் சென்னை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகியோ, https://forms.qle/qsZbxrrSn547L9ep7என்ற Geogle Link-ல் தங்களது விவரங்களை பதிவு செய்துக் கொண்டு பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!

Recommended Stories