Tamil Nadu Transport Department Recruitment : ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்வியை முடித்து வேலை தேடி வெளி உலகத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் தனியார் துறை மூலம் வேலைவாய்ப்புக்களை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பணியை குறிக்கோளாக வைத்து இரவு பகலாக இளைஞர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.
அரசு பணிக்கு இளைஞர்கள் தயாரா.?
இதற்காக தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தாண்டு குரூப் 1, 2 மற்றும் 2ஏ, குரூப் 4 உட்பட மொத்தம் 7 போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடம் நிரப்பப்பட இருப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு
இந்த பணியிடங்களுக்கு விரும்புபவர்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 போக்குவரத்து மண்டலங்கலுக்கு உட்பட்ட 25 பகுதிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், எழுத்து தேர்வு, செய்முறை மற்றும் நேரடி நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியான பணியிடங்கள்
அதிகபட்சமாக கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் நடத்துனர் காலியிடங்களும், சேலம் மண்டலத்தில் 486 ஓட்டுநர் நடத்துனர் காலிப்பணியிடங்களும்
சென்னையில் 364ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 362 ஓட்டுநர் நடத்துனர் காலி பணியிடங்களும், கோவை மண்டலத்தில் 344 ஓட்டுநர் நடத்துனர் காலி பணியிடங்களும் மதுரை மண்டலத்தில் 322 ஓட்டுநர் நடத்துனர் காலி பணியிடங்களும்,
விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு
விழுப்புரம் மண்டலத்தில் 322 ஓட்டுநர் நடத்துனர் காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318ஓட்டுநர் நடத்துனர் காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என சாலை போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.