கோடை காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க சூப்பர் வழி.! மின்வாரியம் வெளியிட்ட அசத்தல் ஐடியா

Published : Mar 03, 2025, 12:52 PM ISTUpdated : Mar 03, 2025, 12:54 PM IST

Summer electricity charges : கோடை காலத்தில் ஏசி பயன்பாட்டால் மின் கட்டணம் அதிகமாகும். மின்சார வாரியம் மின்கட்டணத்தை குறைக்க ஏசி மற்றும் மின்சாதனங்களை பயன்பாடு தொடர்பாக ஆலோசனை வழங்கியுள்ளது.

PREV
16
கோடை காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க சூப்பர் வழி.! மின்வாரியம் வெளியிட்ட அசத்தல் ஐடியா

கோடை காலம் வந்து விட்டாலே மக்கள் அலறி துடிப்பார்கள். அதற்கு ஏற்றார் போல வெயிலின் தாக்கம் தற்போதே தொடங்கி விட்டது. இன்னும் நாட்கள் செல்ல, செல்ல வெயில் அனலை கக்கவுள்ளது. இதனால் தற்போதே மக்கள் முன்னெச்சரிக்கையாக வீட்டில் ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட பொருட்களை வாங்க தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக ஏசியின் விலையானது குறைந்த பட்சம் 60ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டது. இருந்த போதும் வேறு வழியின்றி வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

26
வெயில் கொளுத்தப்போகுது

அதே நேரம் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க ஏசியை பயன்படுத்தினால், மாத இறுதியில் மின்கட்டணம் அனல் காற்றை விட அதிகமாக இருக்கும். இதனால் என்ன செய்வது எப்படி மின்கட்டணத்தை குறைப்பது என தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழகத்தின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக இருந்து.  ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு மே 29-ம் தேதி 97.53 மில்லியன் யூனிட் என்ற அளவில் மின்சார பயன்பாடு இருந்தது

36
மின் கட்டணத்தை குறைப்பது எப்படி.?

அந்த வகையில் இந்தாண்டும் மின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து  தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சாரத்தை சேமிக்கவும், குறைவாக மின்கட்டணம் செலுத்தவும் புது யோசனையை மக்களுக்கு தெரிவித்துள்ளது.  
 

46
ஏசியை பயன்படுத்துவது எப்படி.?

இதன் படி பெரும்பாலான வீடுகளில் ஏசியை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் இந்த கோடை காலத்தில் மட்டும் மின் கட்டணம் எளிதாக 10ஆயிரம் ரூபாயை தாண்டிவிடும். எனவே மின் கட்டணத்தை பெரும் அளவில் குறைக்க ஏசியை 24 டிகிரி பயன்படுத்த வேண்டும் என மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

56
சுவிட்ச் ஆப் செய்யுங்கள்

அடுத்ததாக டிவி, வாஷிங் மெஷின், விளக்குகள், கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடுகள் முடிந்ததும் அதனை அனைத்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தேவையை குறைக்கவும், மின்கட்டணத்தை குறைக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

66
இயற்கை வெளிச்சம்

மேலும் பகல் வேளைகளில் மின்சார தேவையை குறைக்கும் வகையில் வீட்டில் உள்ள விளக்குகளை அனைத்துவிட்டு சூரிய ஒளியை அதிகளவு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார பயன்பாடு குறைவதோடு பூமியை காப்பாற்றுங்கள் என தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories