அப்பாடா; நிம்மதி பெரு மூச்சு விட்ட சீமான்.! உச்சநீதிமன்றம் கொடுத்த குட் நியூஸ்

Published : Mar 03, 2025, 12:13 PM ISTUpdated : Mar 03, 2025, 02:47 PM IST

SEEMAN CASE : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில்  சீமானிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம்  தடை விதித்துள்ளது. பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

PREV
14
அப்பாடா; நிம்மதி பெரு மூச்சு விட்ட சீமான்.! உச்சநீதிமன்றம் கொடுத்த குட் நியூஸ்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்திருந்தார். வாழ்த்துக்கள் என்ற திரைப்படத்தின் இயக்குனராக சீமான் இருந்த போது அந்த படத்தில் நடிகையாக விஜயலட்சுமி பணியாற்றினார்.

அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் சீமான் மீது கடந்த 12 வருடங்களுக்கு முன்பு விஜயலட்சுமி பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். அந்த புகாரில் சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார். 

24
Seeman - Vijayalakshmi Case

இந்த புகார் கொடுத்த சில வாரங்களில் புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றார். மீண்டும் சில ஆண்டுகளுக்கு பிறகு அதே புகாரை விஜயலட்சுமி கொடுத்திருந்தார். அதில் சீமான் தன்னை உறவு கொண்டதாகவும் இதில் பலமுறை கருகலைப்பு மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார். மேலும் அவ்வப்போது சீமானுக்கு எதிராக வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்த சூழ்நிலையில் விஜயலட்சுமி புகாரை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்து வழக்கு தொடர்பாக 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

34
சீமானுக்கு போலீசார் சம்மன்

இதனையடுத்து சீமான் வீட்டில் போலீசார் சம்மன் அளித்தனர். ஆனால் போலீசார் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் மீண்டும் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. இதில் சம்மன் கிழித்ததை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் வளசரவாக்கம் போலீஸ் விசாரணைக்கு சீமான் ஆஜராகியிருந்தார்.

இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் இன்று வழக்கு விசாரணையின் போது சீமான் தரப்பில்   12 வருடத்திற்கு முன்பான வழக்கு எனவும், 3 முறை நடிகை புகார் கொடுத்து திரும்ப பெற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.

44
உச்சநீதிமன்றத்தில் முறையீடு

தற்போது புதிய அரசு பொறுப்பேற்றதும்  மீண்டும் வழக்கு விசாரிக்கப்படுவதாக வாதிடப்பட்டது.. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படது. இதனையேற்ற நீதிபதி போலீசார் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும்  இரண்டு தரப்புக்கும் இடையே பேசி தீர்வு காண 2 மாதங்கள் அவகாசமும் வழங்குவதாக தெரிவித்தனர். மேலும் எதிர் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories