Published : Mar 03, 2025, 11:13 AM ISTUpdated : Mar 03, 2025, 11:46 AM IST
ADMK MEETING : திருப்பூரில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன. ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் இக்கூட்டத்தில் சிறப்பு பரிசுகளும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சை கேட்பதற்காக காத்திருந்த காலம் போய் தலைவர்களின் பேச்சு கேட்க கூட்டத்தை வலுக்கட்டாயமாக கூட்ட வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் இரவு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களின் பொதுக்கூட்டம் நடைபெறும்.
இதற்காக பல ஊர்களில் இருந்து மக்கள் பேச்சை கேட்பதற்காக வருவார்கள். இரவு முழுவதும் தங்களது தலைவர்களின் முகத்தை பார்க்க காத்திருப்பார்கள். இந்த நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இருக்கிற இடத்தில் இருந்து மொபைல் போனிலே அனைத்தையும் நேரலையாக பார்க்க முடிகிறது.
24
பொதுக்கூட்டத்திற்கு ஆட்கள் சேர்ப்பு
இதனால் அரசியல் தலைவர்களை நேரில் சென்று பார்க்கவோ, பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேசுவதை கேட்கவோ விரும்பவில்லை. இதனால் தங்கள் கட்சி தான் பலமான கட்சி என்பதை நிருபிப்பதற்காக ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டி கூட்டத்தை கூட்டி வருகிறது. அந்த வகையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு 300 ரூபாய் மற்றும் உணவும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அமர்ந்திருக்கம் நாற்காலியை வீட்டிற்கு எடுத்து செல்லலாம் எனவும் அறிவித்து கூட்டத்தை கூட்டியது.
34
திருப்பூரில் அதிமுக கூட்டம்
இந்த நிலையில் திருப்பூரில் அதிமுக கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்கு புதுவகையான முறையை கையாண்டுள்ளது . வருகின்ற 5-ம் தேதி ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊத்துக்குளி பகுதியில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கே சி கருப்பன், தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனவே இந்த கூட்டத்திற்கு பொதுமக்களை அதிகளவில் வரவைக்கும் வகையில், அதிமுக புது வகையான ஒரு யுக்தியை கையாண்டுள்ளது. அதன் படி, பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3-நபர்களுக்கு தங்க நாணயம் வழங்க இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
44
தங்க நாணயம், பரிசு பொருட்கள்
மேலும் 300 நபர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் மிக்சி ,குக்கர், கிரைண்டர், பீரோ ,பேன், சில்வர் பாத்திரங்கள் குலுக்கல் முறையில் பரிசு பொருட்களாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் பொதுக்கூட்டத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது என அதிமுகவினர் சார்பில் தற்பொழுது ஊத்துக்குளி பகுதி முழுவதுமே துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.