அமித்ஷாவை நேரடியாக போட்டு தாக்கிய எடப்பாடி..! தன்மானம் தான் முக்கியம் இனி ஒரு இமி அளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்..

Published : Sep 16, 2025, 07:39 AM IST

டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி உட்கட்சி விவகாரத்திற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இது முற்றிலும் பொய் எங்களுக்கு அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.

PREV
15
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.வில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பல்வேறு அதிரடிகள் நடந்த வண்ணம் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்த செங்கோட்டையன் திடீரென அவருடன் மோதல் போக்கை கடைபிடித்த நிலையில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய தலைவர்களை கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்று பொதுச்செயலாளருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கட்சியின் அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குடியரசு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

25
அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம்

ஆனால் அதிமுக.வில் உச்சகட்டத்தை அடைந்துள்ள உட்கட்சி விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காகவே பழனிசாமி டெல்லி செல்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக.வில் நிலவும் உட்கட்சி விவகாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கப்போவதாக செய்திகள் வெளியாகின்றன. அதிமுக.வை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம். இதில் ஒரு இமி அளவு கூட நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.

35
துணைமுதல்வர் பொறுப்பு கொடுத்தும் திருந்தவில்லை

சிலர் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக சதி செய்தார்கள். பின்னர் அவர்களை மன்னித்து மீண்டும் கட்சியில் இணைத்து துணைமுதல்வர் என்ற உயரிய பொறுப்பை வழங்கினோம். ஆனால் அதன் பின்னரும் அவர்கள் திருந்தவில்லை. அதிமுகவினர் கோவிலாகக் கருதும் தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அப்படிப்பட்ட நபரை எப்படி மீண்டும் கட்சிக்குள் இணைக்க முடியும்..?

45
18 எம்எல்ஏக்களை கடத்தி சென்றவரை எப்படி கட்சியில் இணைக்க முடியும்?

அதே போன்று அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக ஒருவர் 18 எம்எல்ஏக்களை கடத்திச் சென்று அதிமுக.வுக்கு எதிராக சதி செய்தார். நான் தொண்டனாக இருந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். எனக்கு உறுதியான மனநிலை உண்டு. நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன். யாரும் என்னை மிரட்ட முடியாது. இப்படிப்பட்டவர்களை எல்லாம் எப்படி மீண்டும் கட்சிக்குள் இணைக்க முடியும்.?

55
அதிமுகவை கபலீகரம் செய்ய பார்த்தார்கள்

அதிமுக ஆட்சியில் இருந்த போதும் சரி, தற்போதும் சரி. மத்திய அரசு அதிமுக.வுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் அளிக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சிலர் கட்சியை கபலீகரம் செய்ய நினைத்தார்கள். ஆனால் அதனை காப்பாற்றிக் கொடுத்தது யார் என்று அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories