கோபிசெட்டி பாளையத்தில் இருந்து 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்ற நிலையில் வருகின்ற 30ம் தேதி கோபியில் பிரமாண்ட பொதுக்குழுவுவை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சராக இருந்த செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த அவருக்கு மாநில நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இந்த பொறுப்பை விஜய் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் எம்பி சத்யபாமா உட்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் நேற்றைய தினமே தவெகவில் இணைந்தனர்.
24
செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு
மேலும் செங்கோட்டையன் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவர் விஜய்யை கோபிசெட்டி பாளையத்திற்கு நேரில் அழைத்து வந்து அவர் தலைமையில் பிரமாண்ட கூட்டம் நடத்த வேண்டும். அப்பொழுது தான் தனது செல்வாக்கை பிற அரசியல் கட்சி தலைவர்களுக்கு எடுத்துக்காட்ட முடியும் என்று செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
34
கோபிசெட்டி பாளையத்தின் நாயகன்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் தனது பயணத்தை கோபிசெட்டி பாளையத்தில் இருந்து தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார். 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செங்கோட்டையன் 8 முறை இதே கோபிசெட்டி பாளையத்தில் இருந்து தான் தேர்வு செய்யப்பட்டார் என்ற நிலையில், இந்த தொகுதி செங்கோட்டையனின் கோட்டை கிடையாது. அதிமுகவின் கோட்டை. செங்கோட்டையன் அதிமுக சார்பில் போட்டியிட்டதால் தான் வெற்றி பெற்றார் என்பதை எடுத்துச்சொல்லும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வருகின்ற 30ம் தேதி நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி கோபி தொகுதியில் அதிமுகவுக்கு தான் செல்வாக்கு அதிகம் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அப்படி செய்யும் பட்சத்தில் கோபி தொகுதியில் இருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் செங்கோட்டையன் பின்னால் செல்வது கட்டுப்படுத்தப்படும் என்ற நோக்கத்தில் இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.