புருஷனுக்கு ஊத்தி கொடுத்து மட்டையாக்கிவிட்டு கள்ளக்காதலனுடன் பரிமளா பார்த்த பலான வேலை! இறுதியில் நடந்த பயங்கரம்

Published : Nov 28, 2025, 12:50 PM IST

ஈரோட்டில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்த ஸ்ரீதரின் மனைவி பரிமளா, கணவனின் நண்பருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். இந்த உறவை கணவன் கண்டுபிடித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து உடலை புதரில் மறைத்துள்ளார். 

PREV
15
காதல் திருமணம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காசி பில்லாம் பாளையத்தில் வசித்து வருபவர் ஸ்ரீதர்(36). இவர் பரிமளா (34) என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது சொந்த ஊரான நாகப்பட்டினத்தில் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாக பெருந்துறை காசிப்பிள்ளாம் பாளையத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.

25
கள்ளக்காதல்

ஸ்ரீதரன் பெருந்துறையில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பரிமளா சொந்தமாக இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதரனுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறை தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகினர். இந்நிலையில் நண்பர் ஸ்ரீதரின் வீட்டிற்கு அடிக்கடி கார்த்திகேயன் சென்று வந்த நிலையில் ஸ்ரீதரின் மனைவி பரிமளாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியதை அடுத்து இருவரும் போனில் பேசுவது மட்டுமல்லாமல் வெளியில் சுற்றி வந்துள்ளனர். மேலும் ஸ்ரீதரன், கார்த்திகேயனுடன் சேர்ந்து வீட்டிலேயே இருவரும் மது அருந்தி வந்துள்ளனர்.

35
கணவர் கண்முன்னே நெருக்கம்

இதேபோன்று ஒரு நாள் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால் ஸ்ரீதரன் ஃபுல் மப்பில் மட்டையானார். அப்போது பரிமளா உடன் கார்த்திகேயன் இருவரும் அறையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மது போதையில் ஸ்ரீதரன் வீட்டின் படுக்கை அறையில் பார்த்தபோது கார்த்திகேயன் மற்றும் பரிமள ஆகியோர் உல்லாசத்தில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

45
கணவனின் உடலை புதரில் வீசிய மனைவி

இதனையடுத்து கடும் கோபத்தில் இருந்த கணவன் ஸ்ரீதரனை சமாதானம் படுத்துவதாக கூறி கள்ளக்காதலன் கார்த்திகேயன் மது அருந்துவதற்காக ஈங்கூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கார்த்திகேயன் வைத்திருந்த கருப்பு டீ சட்டை பயன்படுத்தி கொடூரமாக முறையில் ஸ்ரீதரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இதுதொடர்பாக பரிமளாவிடம் கூறியுள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பரிமளா சாக்கு மூட்டையில் கணவனின் உடலை புதர் பகுதியில் மறைத்து வைத்து ஈரோட்டில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

55
போலீஸ் கைது

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பிறகு பரிமளா மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலுடன் இணைந்து மனைவி தாலி கட்டிய கணவனை தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories