திக்.. திக்.. நெருங்கும் டிட்வா புயல்! இன்று மழை அடிச்சு ஊத்தப்போகும் மாவட்டம் இதுதான்! வெதர்மேன் மற்றொரு அதிர்ச்சி செய்தி!

Published : Nov 28, 2025, 10:56 AM IST

டிட்வா புயல், நவம்பர் 30 அன்று வட தமிழ்நாடு-புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்.

PREV
14
டிட்வா புயல்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. முதலில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

24
30ம் தேதி புயல் கரையை கடக்கும்

இந்த புயல் நவம்பர் 30ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு புதுச்சேரி அதை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் மற்றும் மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

34
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: டிட்வா புயல் இலங்கையின் கரடுமுரடான மலைப்பகுதிகளுக்குள் சென்று மிகவும் பலவீனமடைந்து மீண்டும் திறந்த நீர்நிலைகளுக்கு வந்தவுடன் மீண்டும் வலுபெற முயற்சிக்கும். புயல் மேலே நகரும்போது இன்று இலங்கையில் கனமழை பெய்யும் கடைசி நாளாகும். இந்த புயலால் இலங்கையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

44
மிக கனமழை பெய்யும் பகுதிகள் எதுவும் இல்லை

அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி கடற்கரை, ராமநாதபுரம் கடலோரப் பகுதிகள், நாகை, தஞ்சாவூர் தெற்குப் பகுதிகள், கடற்கரைக்கு அருகில் உள்ள புதுக்கோட்டைப் பகுதிகள் மற்றும் திருவாரூர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு அருகில் வடக்கு கடல்களுக்கு அருகில் சூறாவளி உருவாகும். மிக கனமழை பெய்யும் பகுதிகள் எதுவும் இல்லை. அதேபோல் அதிக மழை பெய்யும் பகுதிகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories