குரூப் 2A முதன்மை தேர்வு எழுத போறீங்களா? குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு! டிசம்பர் 1ம் தேதி முதல்!

Published : Nov 28, 2025, 10:21 AM IST

தமிழ்நாடு அரசு, TNPSC குரூப் 2A முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது. மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் இந்த வகுப்புகள், டிசம்பர் 1 முதல் அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படும். 

PREV
15
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்

தனியார் துறையில் பல லட்சம் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடந்தாலும் எப்படியாவது அரசு பணியில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக இருந்து வருகிறது. குறைவான பணியிடங்களாக இருந்தாலும் இதற்கான பல லட்சம் இரவு பகல் பாராமல் படித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்படுகிறது . இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணியும் வழங்கப்படுகிறது.

25
இலவசமாக பயிற்சி வகுப்புகள்

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தனியார் பயிற்சி நிலையங்களில் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து படிக்கும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பாக இலவசமாகவே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள்  மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

35
மாதிரித் தேர்வுகள்

இதனில் போட்டிதேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும்  நடத்தப்பட்டு வருகின்றன.

45
குரூப் 2A முதன்மை தேர்வு

இப்பொருள் தொடர்பில்,  மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group IIA முதன்மை போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை டிசம்பர் 1ம் தேதி  திங்கட்கிழமை அன்று முதல் திங்கள் முதல் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும்  காலை  10  மணி முதல்  பிற்பகல் 1  மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

55
பயிற்சி வகுப்பின் விவரங்கள்  பின்வருமாறு :

பயிற்சி  வகுப்பு பயிற்சி வகுப்பின் நேரம் TNPSC Group IIA Mains (01.12.2025  திங்கட்கிழமை முதல்)

காலை  10  மணி முதல்  பிற்பகல் 1  மணி வரை (திங்கள் முதல் வெள்ளி வரையிலான அனைத்து வேலை நாட்களிலும்)

எனவே TNPSC Group IIA முதன்மை போட்டித்தேர்வுக்கு  தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக   கலந்து   கொண்டு பயனடையுமாறு   மாநில   தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும்  வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சி துறையின் இயக்குநர் டாக்டர்.சி.பழனி தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories