வெள்ளை அறிக்கை கேட்டா வெள்ளை பேப்பரை காட்டுவதா..? எவ்வளவு ஏத்தம் இருக்கனும்.. ஆவேசத்தில் பொங்கிய இபிஎஸ்

Published : Sep 26, 2025, 10:32 AM IST

தொழில் முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டதற்கு வெள்ளை காகித்தைக் காட்டிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

PREV
14
தொழில்துறை அமைச்சரை வெளுத்தெடுத்த பழனிசாமி

தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவ கையில் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பழனிசாமி முதல்வர் ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோரை கடுமையாக சாடினார்.

24
75 சதவீதம் நிறைவேற்றப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்..?

பொதுமக்கள் மத்தியில் பேசிய பழனிசாமி, அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஒட்டுமொத்தமாக திமுக ஆட்சியில் 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, ரூ.10 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், ஒட்டுமொத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 75 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

34
வெள்ளை அறிக்கை கேட்கும் பழனிசாமி

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற அங்கீகாரத்தை தமிழக மக்கள் அதிமுக.வுக்கு அளித்துள்ளனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் முதல்வர் சொன்ன கருத்துகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு கேட்டிருந்தேன். அந்த வெள்ளை அறிக்கையில் தான் எந்தெந்த நிறுவனங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன. நிறுவனங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் எத்தனை கோடி, எத்தனை லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று கண்டுபிடிக்க முடியும்.

44
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்..

75 சதவீத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதல்வர் சொல்கிறார். அது உண்மை என்றால் தமிழகத்தில் சுமார் 25 லட்சம் இளைஞர்களுக்காவது வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அப்படி என்றால் முதல்வர் சொன்ன கூற்று பொய் தானே. மேலும் வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று சொன்னால் வெள்ளை காகிதத்தை எடுத்து தொாழில்துறை அமைச்சர் ராஜா காட்டுகிறார். எவ்வளவு ஏத்தம் இருந்தால் அவர் இப்படி செய்ய முடியும்.

சட்டியில் இருந்தாதானே அகப்பையில் வரும் என்று கிராமத்தில் பழமொழி சொல்வார்கள். அதே போன்று முதலீடுகள் தொடர்பாக நீங்கள் தெரிவித்த கருத்துகள் உண்மையாக இருந்தால் தானே வெள்ளை அறிக்கை வெளியிட முடியும். அப்படி செய்யாததால் தான் நீங்கள் வெற்று காகிதத்தை எடுத்து காட்டுகிறீர்கள். அமைச்சர் ராஜாவின் செயல் திமுக அரசு வெற்று விளம்பர மாடல் அரசு என்பதை நிரூபித்துள்ளது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories