அதிகாலையில் அதிர்ச்சி! முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி!

Published : Sep 26, 2025, 08:58 AM IST

அதிமுக முன்னாள் சபாநாயகரும், தற்போதைய அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தனபாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

PREV
13
தனபால்

அதிமுக தொடங்கிய காலத்தில், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தனபால் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, தொகுதி மறுசீரமைப்பை அடுத்து 2011ம் ஆண்டில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

23
முன்னாள் சபாநாயகர் தனபால்

சட்டப்பேரவையின் துணைத் தலைவராகப் பதவி வகித்த இவர் சட்டப்பேரவைத் தலைவர் ஜெயக்குமார் பதவி விலகியதை அடுத்து அக்டோபர் 10ம் தேதி 2012ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் 19வது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார். தற்போது அவினாசி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

33
தனபால் மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உயர் ரத்த அழுத்த பாதிப்பு தனபாலுக்கு உள்ள நிலையில், மருத்துவமனையிலும் இதற்காக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories