ஒருத்தன் மட்டும் ஆட்சி செய்யறதால தான் தமிழகத்தில் ஊழல் அதிகம்..! கூட்டணி வேண்டும் கதறும் டாக்டர் கிருஷ்ணசாமி

Published : Sep 26, 2025, 08:48 AM IST

தமிழகத்தில் ஒற்றைக் கட்சி ஆட்சியில் இருப்பதால் தான் ஊழல் அதிகம் நடைபெறுகிறது, கூட்டணிக்கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்படாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

PREV
14
தென்மாவட்டங்களில் தொழில் வாய்ப்புகளை பெருக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர் மாவட்டங்களை மட்டுமே மையமாகக் கொண்டு துவங்கப்படுகின்றன. இதேபோன்று தென் மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் வரவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தி இருக்கிறோம்.

சில தொழிற்சாலைகள் தூத்துக்குடி, திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதிக்கு வருகின்றன. வறட்சி மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும் போது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான நோக்கம். ஆனால் தூத்துக்குடியில் அண்மையில் வின் ஃபாஸ்ட் என்ற கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. அதே போல் சில தொழிற்சாலைகள் தொடங்கபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் கட்டுமான பணிகளுக்கு உள்ளூர் மக்களை பயன்படுத்திக் கொள்கின்றனர் தவிர, தொழிற்சாலைகள் தொடங்கிய பிறகு குறிப்பாக நிர்வாக ரீதியான பணிகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை மறுக்கின்றனர்.

24
வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம்

உள்ளூர் மக்களை துப்புரவு பணி மற்றும் கடினமான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். நல்ல கௌரவமான பணிகளுக்கு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை மறுக்கின்றனர். குறிப்பாக பட்டியலின, தேவேந்திர குல மக்களுக்கு முற்றாக வாய்ப்பு மறுக்கப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கப்படும் போது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் இன்றுவரை அந்த சட்டத்தை கொண்டு வரவில்லை. எனவே எந்த தொழிற்சாலைகள் தொடங்கினாலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவில் உள்ளூர் மக்களை பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. நம் நாட்டில் குறைந்தபட்சம் வேலைவாய்ப்பு கூட அவர்களுக்கு முன்னுரிமை இல்லாமல் தொழிற்சாலைகள் இங்கு வருவதால் எவ்வித பலனும் கிடையாது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் உப்பளங்கள் என்ற பெயரில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு என்று கூறி தான் அவ்வளவு பெரிய ஆலை மூடப்பட்டது.

34
எல்லா பிரச்சினைக்கும் காரணமே ஒற்றை கட்சி ஆட்சி முறை தான்

ஆனால் தூத்துக்குடி அருகே மீன் கழிவு ஆலை, நெல்லை துறையூரில் கெமிக்கல் ஆலை போன்றவற்றினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதன் நோக்கத்திற்கு மாறாக கட்டிடம் கட்ட, மூட்டை தூக்க மட்டும் உள்ளூர் மக்களும் மற்ற உயர் பணிகளுக்கு வெளி மாநிலத்திலிருந்து ஆட்களை கொண்டு வந்து விடுகின்றனர். எனவே புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் அடுத்த மாதம் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகன பேரணி மற்றும் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக கடந்த காலங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்கள். ஒரு கட்சி ஆட்சி முறையினால் தமிழகத்தில் நடக்கும் அனைத்து அவலங்களுக்கும், ஊழல்களுக்கும், கனிமவளக் கொள்ளைகளுக்கும், வேலையில்லா திண்டாட்டத்திற்கும், வறுமைக்கும் இந்த ஒரு கட்சி ஆட்சிமுறை தான் காரணம். தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பும் சிந்தனையும் கூட்டணி கட்சி ஆட்சி முறைதான்

44
2026ல் கூட்டணி ஆட்சி உறுதி

2026ல் தனியாக ஒரு கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாக இருக்கிறது. கூட்டணி ஆட்சிக்கான காலம் தான் 2026ல் கனிந்து வருவதாக கருதுகிறேன். திமுக அதிமுக சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவில்லை என்றால் யார் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொள்கிறார்களோ அவர்கள் தான் 2026ல் முன்னிலை வகிப்பார்கள். கூட்டணி ஆட்சியை குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை எதையும் இந்த நிமிடம் வரை நிராகரிக்கவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories