School Holiday :மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
24
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
34
கன்னியாகுமரியில் விடாமல் மழை
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதி மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் திற்பரப்பில் 18 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
இன்றைய தினமும் கனமழை பெய்வதற்கான சூழல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.