குஷியோ குஷி..! தொடர் விடுமுறை- அரசு ஊழியர்கள் மாணவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு

Published : Sep 26, 2025, 07:45 AM IST

ஆயுத பூஜை மற்றும் காலாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

PREV
15
மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். அந்த வகையில் விடுமுறை கிடைக்காத என ஏங்கி கொண்டிருந்த மாணவர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கும் கொண்டாட்டமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி ஆயூத பூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. இது மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதியும் விடுமுறை அளிக்க கோரி முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இன்று முதல் தொடங்கியுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் அக்டோபர் 6ஆம் தேதி வரை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுலாவிற்கும், சொந்த ஊர்களுக்கும் மக்கள் புறப்பட தயாராகி வருகின்றனர். இதன்யடுத்து சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

25
தொடர் விடுமுறை

காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

26/09/2025 (வெள்ளிக் கிழமை) 27/09/2025 (சனிக்கிழமை), 28/09/2025 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு 29/09/2025, மற்றும் 30/09/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

35
தொடர் விடுமுறை- சிறப்பு பேருந்து இயக்கம்

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி. ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 26/09/2025 மற்றும் 27/09/2025 ஆகிய நாட்களில் 215 பேருந்துகளும் 29/09/2025 மற்றும் 30/09/2025 ஆகிய நாட்களில் 185 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 26/09/2025 மற்றும் 27/09/2025 ஆகிய நாட்களில் 145 பேருந்துகளும் 29/09/2025 மற்றும் 30/09/2025 ஆகிய நாட்களில் 105 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

45
கிளாம்பாக்கம், கோயம்பேடு சிறப்பு பேருந்து

இதில் முக்கியமாக சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 26/09/2025 (வெள்ளிக் கிழமை) அன்று 790 பேருந்துகளும் 

27/09/2025 (சனிக்கிழமை) 565 பேருந்துகளும் 29/09/2025 (திங்கட்கிழமை) 190 பேருந்துகளும் மற்றும் 30/09/2025 (செவ்வாய்கிழமை) அன்று 885 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப 04/10/2025 முதல் 05/10/2025 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கிட அனைத்து இடங்களிலிருந்தும் திட்டமிடப்பட்டுள்ளது.

55
முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 22,735 பயணிகளும் சனிக்கிழமை அன்று 14,415 பயணிகளும் ஞாயிற்றுக்கிழமை அன்று 11,908 பயணிகளும் திங்கட்கிழமை அன்று 8,070 பயணிகளும் மற்றும் செவ்வாய் அன்று 33,138 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். 

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories