தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபாக்ஸ்கான் நிறுவனம், முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தியதாகவும், ரூ.15,000 கோடி முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது. பொம்மை முதல்வரோ, இது தான் "செயலில் ஸ்டாலின் மாடல்" என்று மார்தட்டிக் கொண்டார். இந்நிலையில், #Foxconn நிறுவனம், அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.