அமித்ஷா.வுடன் ரகசிய பேச்சு..! முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்த எடப்பாடி

Published : Sep 17, 2025, 06:49 AM IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில் முகத்தை கைக்குட்டையால் மறைத்தபடி வெளியேறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
கலகக்குரல் எழுப்பிய செங்கோட்டையன்

அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நான் அந்த பணிகளை மேற்கொள்வேன் என்று அறிவித்து 10 நாள் கெடு விதித்தார். மேலும் கட்சியில் இணைக்கப்படும் தலைவர்கள் தொடர்பாக பொதுச்செயலாளரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். செங்கோட்டையனின் நடவடிக்கைக்கு அதிமுக முன்னாள் நிர்வாகிகளான ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர்.

24
அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி

செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனை அடுத்த தினமே அனைத்து விதமான கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் தான் தெரிவித்த 10 நாள் கெடு முடிவடையும் தருவாயில் ஹரித்துவார் செல்வதாகக் கூறி டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சம்பவம் அதிமுக வட்டத்திலும், தமிழக அரசியலிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

34
குடியரசு துணைத்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்

இந்நிலையில் குடியரசு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்போவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி புறப்பட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, இன்பதுரை, தனபால் உள்ளிட்டோர் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.

44
முகத்தை மூடிக்கொண்டு வெளியேறிய எடப்பாடி பழனிசாமி

முன்னதாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அமித் ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி பின்னர் அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு தாம் மட்டும் அமித் ஷாவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதும் பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடியபடி எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தனி காரில் விடுதிக்கு சென்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories