ஆயுதபூஜை, தீபாவளி தொடர் விடுமுறை! கோவை, மதுரை, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்! முழு விவரம்!

Published : Sep 16, 2025, 07:02 PM IST

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து கோவை, மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரஙக்ளை பார்ப்போம்.

PREV
14
Ayudha Puja and Diwali Special Trains

ஆயுத பூஜை பண்டிகை அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதேபோல் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏற்கெனவே ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் இந்த இரண்டு பண்டிகை விடுமுறை காலத்தையும் கொண்டாட ஏதுவாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குமா? என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து கோவை, மதுரை, நெல்லை, நாகர்கோவிலுக்கு ஆயுத பூஜை சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

24
சென்னை டூ கோவை

அதன்படி சென்னை சென்ட்ர‌ல்-கோவை போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள் (06123/06124) இயக்கப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் வியாழன்தோறும் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 0613) மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். மறுமார்க்கமாக போத்தனூரில் இருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி) மாலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் (வ.எண்: 06124) மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னை டூ செங்கோட்டை

சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் மாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டை வந்தடையும். இதேபோல் செங்கோட்டையில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் வியாழன்தோறும் இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த ரயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம் வழியாக செல்லும்.

34
சென்னை-திருநெல்வேலி

நெல்லையில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் வியாழன்தோறும் இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (வ.எண்: 06070) மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 26. அக்டோபர் 3, 10,17, 24 ஆகிய தேதிகளில் வெள்ளிதோறும் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்: 06069) மறுநாள் நள்ளிரவு 1.30 மணிக்கு நெல்லை வந்தடையும். இந்த ரயில் திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக செல்லும்.

தாம்பரம் டூ நாகர்கோவில்

நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரயில் (வ.எண் 06012) நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 28, அக்டோபர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிறுதோறும் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்) மாலை 3.30 மணிக்கு புறப்படும் ர‌யில் வ.எண்: 06011) மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயில் திருச்சி, மதுரை, நெல்லை வழியாக செல்லும்.

44
சென்னை எழும்பூர்-தூத்துக்குடி

தூத்துக்குடி- சென்னை எழும்பூர் இடையேயான சிறப்பு ரயில் (வ.எண்: 06018) தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்:06017) அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

Read more Photos on
click me!

Recommended Stories