திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சேவூர் ராமச்சந்திரன். இவர் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்நிலையில், ஆரணியில் உள்ள சேவூர் ராமச்சந்திரன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
23
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
மேலும், ஆரணியில் உள்ள சேவூர் ராமச்சந்திரனின் மகன்கள் விஜயகுமார் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சேவூர் ராமச்சந்திரன் 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கும் அதிகமாக 200 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்துகளை குவித்ததாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 6 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் சேவூர் ராமச்சந்திரன் வீட்டு முன்பு அதிமுகவினர் குவிந்துள்ளனர்.
33
வழக்குப்பதிவு
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து (வருமானத்தைவிட 125% அதிகம்) குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சேவூர் ராமசந்திரன் மனைவி மணிமேகலை, மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மகன் சந்தோஷ் குமார் கல்வி நிறுவனத்தையும், மற்றொரு மகனான விஜயகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.