Vegetables Price : கிடு, கிடுவென உயரும் தக்காளி விலை.!! ஒரே வாரத்தில் உச்சத்தை தொட்ட காய்கறிகளின் விலை

First Published | May 29, 2024, 9:16 AM IST

காய்கறி விலையானது கடந்த ஒரு சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை 50ரூபாயை தாண்டியுள்ளது. இதே போல பீன்ஸ், அவரைக்காய் விலையும் அதிகரித்துள்ளது. 
 

காய்கறி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

தொடர் மழை காரணமாக கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டிற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலையானது கிடு, கிடுவென அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும்,  ஊட்டி கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

உயரும் காய்கறி விலை

பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், உஜாலா கத்திரிக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tamilnadu School Reopening Postponed: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது?

Tap to resize

Vegetables Price Today

அவரைக்காய் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

பூண்டு விலை என்ன.?

புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 350 ரூபாய்க்கும்,  பீர்க்கங்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கொத்தவரங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  வாழைப்பூ ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

அதிமுகவை அழித்து எதிர்க்கட்சியாக தங்களை நிலை நிறுத்திக் கொள்வது தான் பாஜக திட்டம்.!எச்சரிக்கும் கொங்கு ஈஸ்வரன்

Latest Videos

click me!