தென் மாவட்டங்களுக்கு கோடை கால சிறப்பு ரயில் சேவை.!புறப்படும் தேதி, நேரம் என்ன.? முன் பதிவு எப்போது தொடங்கும்.?

First Published May 28, 2024, 1:51 PM IST

கோடை விடுமுறை மற்றும் பள்ளிகள் திறப்பையடுத்து தெற்கு ரயில்வே சார்பாக தென் மாவட்ட மக்களுக்கு பயன் அடையும் வகையில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நெல்லை, நாகர்கோவில், மதுரை, திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. 
 

கோடைகால சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பணிகள் பல்வேறு இடங்களுக்கு குடும்பத்தோடு சென்று வருகின்றனர். தற்போது அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டதால் காத்திருப்போர் பட்டியல் மட்டுமே உள்ளது.  இந்த நிலையில் கூடுதல் சிறப்பு ரயில்களை விட வேண்டுமென ரயில் பணிகள் சார்பாக கோரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து தெற்கு ரயில்வே சார்பாகவும் அவ்வப்போது சிறப்பு ரயில்கள் விடப்பட்டு வந்தது.  இந்த நிலையில் திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.  இதற்கான தேதி மற்றும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை

பள்ளி விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்பவும், சொந்த மாவட்டங்களுக்கு செல்லவும் ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில் நெல்லையில் இருந்து சென்னைக்கு 06070 / 06069 என்ற எண் கொண்ட ரயிலானது இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து ஜூன் 6-ம் தேதி 13-ஆம் தேதி 20ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதி ஆகிய தினங்களில் இந்த ரயிலானது இயக்கப்படுகிறது.  திருநெல்வேலியில் இருந்து மாலை 6:45 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அடுத்த நாள் காலை 8.30 மணி அளவில் வந்து சேருகிறது.

Latest Videos


நெல்லை, நாகர்கோவிலுக்கு ரயில் சேவை

இதேபோல சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது.  இந்த ரயிலானது ஜூன் மாதம் 7ஆம் தேதி, 14 ஆம் தேதி, 21 ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி ஆகிய தினங்களில் இயக்கப்படுகிறது.  இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 3 மணியளவில் புறப்பட்டு திருநெல்வேலிக்கு அடுத்த நாள் காலை 7 10 மணியளவில் சென்று சேர்கிறது. இந்த சிறப்பு ரயில்கள்  திருநெல்வேலி,கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அதிராம்பட்டினம், திருவாரூர், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு வந்தடைகிறது.
 

ரயில் புறப்படும் தேதி என்ன.?

இதே போல நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 06019 / 06020 என்ற எண்ணில் இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை நாகர்கோவிலில் இருந்து ஜூன் மாதம் 2ஆம் தேதி, 16ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதிகளில் இரவு 11 மணி 15 நிமிடங்களுக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 11 மணி 15 நிமிடங்களுக்கு வந்து சேருகிறது.

train

முன்பதிவு எப்போது தொடக்கம்.?

இதே போல சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் மாதம் 3ஆம் தேதி 17ஆம் தேதி மற்றும் ஜூலை 1ஆம் தேதி ஆகிய தினங்களில் இந்த ரயிலானது இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்று சேருகிறது.  இந்த ரயில் நாகர்கோயில்,திருநெல்வேலி திண்டுக்கல், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூரில் வந்தடைகிறது.

கூடுதல் ரயில் சேவை

இதே போல நாகர்கோவிலுக்கு மற்றொரு சூப்பர் பாஸ்ட் ரயிலும் இயக்கப்படுகிறது. அந்த ரயிலானது 06021 /06022 என்ற எண் பதிவில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜூன் மாதம் 9 மற்றும் 23ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 11:15 மணியளவில் சென்னை எழும்பூர் வந்தடைகிறது.

இதே போல சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 10 மற்றும் 24 ஆம் தேதிகளில் பிற்பகல் 3 மணி அளவில் புறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சிறப்பு ரயிலுக்கான   முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது
 

click me!