Saidai Duraisamy : சைதை துரைசாமி உடல்நிலைக்கு என்ன ஆச்சு.?? அதிகாலையில் அவரசமாக மருத்துவமனையில் அனுமதி

First Published | May 28, 2024, 10:03 AM IST

அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமிக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். 

saidai duraisamy

யார் இந்த சைதை துரைசாமி.?

சைதை துரைசாமி எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளர், திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து வந்த சமயத்தில், பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி பங்கேற்று எம்ஜிஆருக்கு எதிரான கருத்தை தெரிவித்து வந்தார். அப்போது, ஆவேசமாக மேடைக்கு ஏறிய சைதை துரைசாமி, கருணாநிதிக்கு... எலுமிச்சைப் பழங்களைக் கொண்ட மாலை ஒன்றைப் போட்டவாறே, ''இதைத் தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்; அ.தி.மு.க-வுக்கு எதிரான பித்தம் உங்களுக்குத் தணியட்டும்'' என தெரிவித்தார். 

மனித நேய அறக்கட்டளை

எம்ஜிஆர் மீது பற்ற கொண்டனர். இதனையடுத்து 1984-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.  எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு எந்த அணியிலும் செல்லாமல் அமைதி காத்து வந்த சைதை துரைசாமி, மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில்  அரசு மற்றும் ஐ.ஏ.எஸ் பணிகளுக்கான பயிற்சி மையத்தையும் தொடங்கினார்.  

Tap to resize

சென்னை மாநகர மேயர்

அரசியிலல் இருந்து ஒதுங்கிய இருந்தவரை 2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராக ஜெயலலிதாவால் மீண்டும் களத்தில் இறக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து தீவிர அரசியலில் இருந்த அவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மீண்டும் அமைதியானார். அவரை 2021ஆம் ஆண்டு மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட வைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் மா.சுப்பிரமணியத்திடம் தோல்வி அடைந்தார். 

saidai duraisamy

உடல்நிலை பாதிப்பு- மருத்துவமனையில் அனுமதி

இந்த சூழ்நிலையில் தான் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி மரணம் அடைந்தது அவரை மிகவும் பாதிப்படையவைத்தது. இந்தநிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று காலை அப்போலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நிமோனியா காய்ச்சல் காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து  இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Latest Videos

click me!